விளையாட்டு அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் எல்பிஎல் நடத்தப்பட்டது : ரொஷான் ரணசிங்க
6 view
விளையாட்டு அமைச்சின் அனுமதியின்றி ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். விளையாட்டு அமைச்சோ அல்லது விளையாட்டு அமைச்சர் என்ற ரீதியில் தானோ இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளவில்லை என்றும் இது குறித்து விளக்கம் கோரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விளையாட்டு அமைச்சின் குழுநிலை விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹாவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். T10 போட்டியிலும் விளையாடுவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் தான் அறிந்ததாக அமைச்சர் கூறினார்.
The post விளையாட்டு அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் எல்பிஎல் நடத்தப்பட்டது : ரொஷான் ரணசிங்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விளையாட்டு அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் எல்பிஎல் நடத்தப்பட்டது : ரொஷான் ரணசிங்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
