மாவீரர்நாள் நினைவேந்தலை உணர்ச்சிபூர்வமாக அனுஷ்டிக்க ஒத்துழைக்குமாறு யாழ் முதல்வர் வேண்டுகோள்!
15 view
உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்படவுள்ள நிலையில் அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். அந்தவகையில் அனைத்து பொதுமக்களும் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலுள்ள துயிலும் இல்லங்களுக்கும் நினைவேந்தல் இடங்களுக்கும் சென்று நினைவேந்தல் நிகழ்வை மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மாலை 6.05 மணி அளவில் ஆலயங்களில் மணியொலியை எழுப்புவதற்கு ஆலய நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கட்சி வேறுபாடுகளை தாண்டி அனைவரும் நினைவேந்தலை உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்கு ஒழுங்கமைப்புகள் செய்யப்பட்டுள்ள அதேவேளை துயிலும் இல்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
The post மாவீரர்நாள் நினைவேந்தலை உணர்ச்சிபூர்வமாக அனுஷ்டிக்க ஒத்துழைக்குமாறு யாழ் முதல்வர் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாவீரர்நாள் நினைவேந்தலை உணர்ச்சிபூர்வமாக அனுஷ்டிக்க ஒத்துழைக்குமாறு யாழ் முதல்வர் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
