உலகில் நீண்டகாலம் ஜனாதிபதியாக பதவிவகித்த ஓபியாங்: மீண்டும் ஆட்சிக்கு
6 view
உலகிலேயே அதிக காலம் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் என்ற சாதனைக்கு உரித்தான ஈக்குவடோரியல் கினியாவின் ஜனாதிபதி தியோடோரோ ஒபியாங் நுகுமா Teodoro Obiang Nguema Mbasogo (80) அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் அவர் 95% வாக்குகளைப் பெற்றதாக, வாக்களிப்பு இடம்பெற்று ஆறு நாட்களுக்குப் பிறகு அதிகாரிகள் அறிவித்தனர். ஜனாதிபதி ஓபியாங் 43 வருடங்களாக வலுவான சர்வாதிகார ஆட்சியினை கொண்டுள்ளார். மத்திய ஆபிரிக்காவின் எண்ணெய் வளமிக்க ஈக்குவடோரியல் கினியாவில், பல முக்கிய பதவிகளை ஓபியாங்கின் குடும்ப உறுப்பினர்களே வகிக்கின்றனர். சுமார் 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் ஈக்குடோரியல் கினியா 1968 இல் ஸ்பெயினில் இருந்து சுதந்திரம் பெற்றது. அன்றிலிருந்து இரண்டே ஜனாதிபதிகளை மட்டுமே அந்த நாட்டை ஆட்சி செய்துள்ளனர். 1979 ஆம் ஆண்டு இராணுவ புரட்சி மூலமான ஆட்சிக் கவிழ்ப்பில் ஓபியாங் தனது மாமனாரான பிரான்சிஸ்கோ மசியாஸ் நுகுமாவை பதவி நீக்கம் செய்து ஆட்சிக்கு…
The post உலகில் நீண்டகாலம் ஜனாதிபதியாக பதவிவகித்த ஓபியாங்: மீண்டும் ஆட்சிக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலகில் நீண்டகாலம் ஜனாதிபதியாக பதவிவகித்த ஓபியாங்: மீண்டும் ஆட்சிக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
