தபால் திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு
13 view
கொழும்பு,நவ 27 இலங்கையில் இருந்து தபால் திணைக்களத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால் பொருட்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வெளிநாட்டு தபால் கட்டணத்தை அதிகரிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதனுடன் ஒப்பிடும் போது தனியார் பொதி விநியோக நிறுவனங்களின் கட்டணமும் விலை உயர்த்தப்பட்டன. இதன்காரணமாக தபால் திணைக்களத்தின் ஊடாக அனுப்பப்படும் பொருட்களில் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப வருமானம் அதிகரிப்பதாகவும் பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.எவ்வாறாயினும், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் தபால் பொருட்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
The post தபால் திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தபால் திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
