நினைவேந்தல் உரிமையை தட்டிப் பறிக்க முடியாது – ஜனாதிபதி ரணில் திட்டவட்டம்!

6 view
“ஒவ்வொருவரும் தமது உயிரிழந்த அன்புக்குரிய உறவுகளை அமைதியாக நினைவுகூருவதற்கு முழு உரிமை உள்ளது. அதனை யாரும் தட்டிப்பறிக்க முடியாது.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ‘நவம்பர் 27ஆம் திகதி நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்கு வடக்கு – கிழக்கில் பகிரங்கமாக ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்கு உங்கள் அரசு அனுமதி வழங்கியிருக்கின்றதா?’ என்று ஜனாதிபதி ரணிலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை ஜனநாயக நாடு. நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது. ஒவ்வொரு இனமும் இறந்த தமது உறவுகளை அமைதியாக நினைவேந்த முழு உரிமை உண்டு. இதைவிட வேறு எந்தக் கேள்வியும் தற்போதைய நிலைமையில் அவசியமற்றது” – என்றார்.
The post நினைவேந்தல் உரிமையை தட்டிப் பறிக்க முடியாது – ஜனாதிபதி ரணில் திட்டவட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース