ஒத்துழைப்புக்களை வழங்குவது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததாக அர்த்தப்படாது – அனுர
6 view
எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் வகையில் இங்கி செயற்படுவது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததாக அர்த்தப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். தாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகவில்லை என்றும் எதிர்காலத்தில் நாம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவோமா இல்லையா என்பதை தற்போது கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். தன்னோடு சேர்த்து 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறாமல் சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும் தமக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டார். மேலும் சுதந்திர கட்சியில் மீண்டும் இணையுமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் இருப்பினும் பழைய சுதந்திர கட்சியை மீளக் கட்டியெழுப்புவதையே தாம் விரும்புவதாகவும் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். (நன்றி கேசரி)
The post ஒத்துழைப்புக்களை வழங்குவது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததாக அர்த்தப்படாது – அனுர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒத்துழைப்புக்களை வழங்குவது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததாக அர்த்தப்படாது – அனுர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
