காணாமல் போன 13 வயதுச் சிறுமி 30 நாட்களுக்குப் பின் கண்டுபிடிப்பு
6 view
30 நாட்களுக்கு மேலாக காணாமல் போயிருந்த 13 வயது சிறுமி மற்றும் சிறுமியுடன் இருந்ததாக கூறப்படும் சந்தேக நபர் இரத்தினபுரி – லெல்லோபிட்டிய பகுதியில் வாடகை வீட்டில் இருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். லெல்லொப்பிட்டிய பிரதேச கிராம மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபரும் சிறுமியும் இரத்தினபுரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியாகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதன்படி சந்தேகநபர் நேற்று பிற்பகல் அம்பாறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை – இகினியாகல தேவலஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது 13 வயது மகளை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.தனது பிரிந்த கணவரே மகளை அழைத்துச் சென்றதாக அவர் பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post காணாமல் போன 13 வயதுச் சிறுமி 30 நாட்களுக்குப் பின் கண்டுபிடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காணாமல் போன 13 வயதுச் சிறுமி 30 நாட்களுக்குப் பின் கண்டுபிடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
