ஆசிரியர்களை ஏமாற்றிய அரசாங்கம்!
6 view
ஆசிரிய சேவைக்கான சம்பள அதிகரிப்பை 2023 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்துவதாகவும் அரச சேவையாளர்களுக்கான 5000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதாகவும் அரசாங்கம் வாக்குறுதி வழங்கியது. ஆனால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அந்த வாக்குறுதிகள் உள்வாங்கப்படவில்லை. நடைமுறைக்கு சாத்தியமற்ற வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் , உள்ளூராட்சி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அரச சேவையாளர்களுக்கு ஒரு சதம் கூட சம்பளம் அதிகரிக்காத வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் இடம்பெறுகிறது.நாட்டுக்காக சேவையாற்றிய ஓய்வூதியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனது இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் அவதானம்…
The post ஆசிரியர்களை ஏமாற்றிய அரசாங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆசிரியர்களை ஏமாற்றிய அரசாங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
