எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை: கஜேந்திரகுமார்
7 view
யாழ்ப்பாணம்,நவ 27 தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமஸ்டி எனக் கூறி ஒற்றையாட்சிக்குள் முடக்கும் தீர்வை வலியுறுத்தும் தரப்புகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சமகால நிலை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். “சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற தரப்புகள் எவ்வாறு சிங்கள மக்களாலேயே விரட்டியடிக்கப்பட்டார்களோ, அதே போன்று தமிழ் பேசும் மக்களின் ஆணையை பெற்றுவிட்டு அதற்கு மாறாக செயல்படும் தரப்புகளை மக்கள் விரட்டியடிக்க முன்வர வேண்டும். எந்தவிதத்திலும் தமிழ் பேசும் மக்களது அரசியல் அபிலாசைகளையோ, தமிழ் தேசிய அங்கீகாரத்தையோ அல்லது தனித்துவமான இறைமையையோ வடகிழக்கில் சுயநிர்ணயத்தை அனுபவிக்க கூடிய சமஷ்டி தீர்வையோ வழங்குவதற்கு தயாரில்லாத இடத்தில் சமஸ்டி என்ற கொள்கையை ஏற்க முடியாது. அடுத்த தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கோ அல்லது…
The post எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை: கஜேந்திரகுமார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை: கஜேந்திரகுமார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
