உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து செயற்பட தயார்: சீன ஜனாதிபதி
30 view
உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து செயற்பட சீனா தயார் என சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் கூறியுள்ளார் என வட கொரியாவின் கொரிய மத்திய செய்திச் சேவை இன்று தெரிவித்துள்ளது. சீன ஜனாதிபதியின் 3ஆவது பதவிக்காலத்துக்கு ஸீ ஜின்பிங் தெரிவுசெய்யப்பட்டமைக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு அனுப்பிய பதிலில சீன ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ‘பிராந்தியத்தினதும் உலகினதும் அமைதி, ஸ்திரத்தன்மை, அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்துக்காக வடகொரியாவுடன் இணைந்து செயற்பட சீனா தயாராகவுள்ளது’ சீன ஜனாதிபதி தெரிவித்தார் என கொரிய மத்திய செய்திச் சேவை தெரிவித்துள்ளது. கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உட்பட நீண்ட தூரஏவுகணைகள் பலவற்றை வட கொரியா பரிசீலித்து சில நாட்களில் சீன ஜனாதிபதியின் இச்செய்தி வெளியாகியுள்ளது. இறுதியாக 2017 ஆம் ஆண்டில் தனது 6 ஆவது அணுவாயுத பரிசோதனையை வடகொரியா நடத்தியது. அண்மைய நாட்களில் பெரும் எண்ணிக்கையான ஏவுகணைகளை வடகொரியா…
The post உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து செயற்பட தயார்: சீன ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து செயற்பட தயார்: சீன ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
