பேஸ்புக்கில் ஆபாசம்; சபையில் பொங்கியெழுந்த முக்கிய அமைச்சர்.
6 view
பெண் ஆசிரியர்களுக்கு முகநூல் ஊடாக தெரிவிக்கப்படும் ஆபாசமான கருத்துக்கள் குறித்து தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக,உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி,விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். சிலர் தேவையில்லாத பிரச்சினையை எழுப்பியதாலேயே இவ்வாறான விடயங்கள் இங்கு வந்ததாக தெரிவித்த அவர், குறித்த விடயம் தொடர்பில் முடியுமானால் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு செல்லவுள்ளனர். அத்தோடு பெண் ஆசிரியைகளுக்கு குறிப்பிட்ட நடத்தை விதிகள் உள்ளதாகவும், அதில் ஆடை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், சாறி அணிவது அவசியம் என கூறவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
The post பேஸ்புக்கில் ஆபாசம்; சபையில் பொங்கியெழுந்த முக்கிய அமைச்சர். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேஸ்புக்கில் ஆபாசம்; சபையில் பொங்கியெழுந்த முக்கிய அமைச்சர். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
