கடற்றொழிலாளர்கள் விரும்பாத கடலட்டைப் பண்ணைகள்?
6 view
வடக்கு மற்றும் கிழக்கில் கடலை அண்மித்த 36 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நில பரப்பில் பெரும் கடலட்டை பண்ணைகளை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழலில் இயற்கையின் கொடையாகவுள்ள கடலைப் பயன்படுத்தி இவ்வாறான பண்ணைகளை அமைப்பதன் மூலம் சர்வதேச வர்த்தகச் செயற்பாடு வினைத்திறன் பெறும் என்பதோடு இதன் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டமுடியும் என்பதும் அதிகாரிகளின் வாதமாகவுள்ளது. ஆனால், பண்ணைகள் அமைக்கப்படுகின்றபோது, அந்தந்த பிரதேசத்துக்குரிய கடற்றொழிலாளர்களிடத்தில் தெரியப்படுத்தாது, அவர்களின் வாழ்வாதத்தினை பாதிக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமையே பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக, வடக்கின் நான்கு மாவட்டங்களில் முல்லைத்தீவு தவிர்ந்த ஏனைய 3 மாவட்டங்களும் கடல் அட்டை வளர்ப்பிற்கு உகந்த மாவட்டங்கள் என கண்டுகொள்ளப்பட்டதனால் தாராளமாக பண்ணைகள் வழங்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இதுவரையில் 355 பண்ணைகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு 265 கடல் அட்டைப் பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இவற்றினைவிட மேலும் 209 பண்ணைகளிற்கு கோரிக்கைகள் …
The post கடற்றொழிலாளர்கள் விரும்பாத கடலட்டைப் பண்ணைகள்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடற்றொழிலாளர்கள் விரும்பாத கடலட்டைப் பண்ணைகள்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
