தமிழர்களின் ஆயுத போராட்டம் மௌனித்ததே தவிர போராட்டம் நிறுத்தப்படவில்லை- சிவாஜிலிங்கம் ஆவேசம்!
6 view
இன்றைய தினம் தலைவர் பிரபாகரனின் 68வது அகவை தினம் ஆகும் . இந்த அகவை தினத்தினை ஈழத்தமிழர் தமிழீழ எழுச்சி நாளாக கொண்டாடி வருகின்ற சூழ்நிலையிலே நாங்கள் ஒரு விடயத்தினை கூற விரும்புகிறோம். இன்றைய தினம் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் சிறுவயதில் இருந்து வாழ்ந்த இல்லத்திற்கு முன்னாள் 68 எள்ளுப்பாகுகளை வழங்கியிருந்தோம்.அதேபோல் இனிப்புக்களும் வழங்கப்பட்டன.வெடிகள் கொளுத்தப்பட்டன.அந்த இடத்தில் உறுதி மொழியினையும் மேற்கொண்டிருந்தோம் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுதந்திர தமிழீழம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக போராடிக்கொண்டிருந்தார்களோ அந்த போராட்டம் ஆயுத போராட்டமாக மௌனித்ததே தவிர போராட்டம் நிறுத்தப்படவில்லை ,இந்த சூழ்நிலையின் பின்னணியில் ,ஈழத் தமிழீழம் ஒரு போதும் அரைகுறை தீர்வுகளுக்கு இணங்கப்போவதில்லை என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஒரு சுதந்திரத்துக்கான ஒரு பொதுசன வாக்கெடுப்பு…
The post தமிழர்களின் ஆயுத போராட்டம் மௌனித்ததே தவிர போராட்டம் நிறுத்தப்படவில்லை- சிவாஜிலிங்கம் ஆவேசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களின் ஆயுத போராட்டம் மௌனித்ததே தவிர போராட்டம் நிறுத்தப்படவில்லை- சிவாஜிலிங்கம் ஆவேசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
