இளைஞர் யுவதிகளுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய வழிகாட்டி வலுவூட்டல் நிகழ்வு!
32 view
நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய வழிகாட்டி வலுவூட்டல் நிகழ்வு நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ் தீவகப் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் காலை 11 மணி தொடக்கம் மதியம் 3 மணி வரை நடைபெற்றது. இதன் போது தலைமைத்துவம் ,பால்நிலை சமத்துவம் ,ஒற்றுமை, குழு செயல்பாடு, விடாமுயற்சி ,போன்ற பயிற்சிகள் செயல்முறை விளக்கத்துடன் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டதோடு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ, யாழ் தீவக வலயமைப்பின் நிர்வாகத்தினர், நெடுந்தீவு பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள், மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
The post இளைஞர் யுவதிகளுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய வழிகாட்டி வலுவூட்டல் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளைஞர் யுவதிகளுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய வழிகாட்டி வலுவூட்டல் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
