புலமைப்பரிசில் பரீட்சை அனுமதி அட்டை மாணவர்களுக்கு வழங்கப்படமாட்டாது!
6 view
இந்த ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சை அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களின் வருகைப் பதிவுகளை கொண்ட முறைமை ஒன்று செயற்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
The post புலமைப்பரிசில் பரீட்சை அனுமதி அட்டை மாணவர்களுக்கு வழங்கப்படமாட்டாது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புலமைப்பரிசில் பரீட்சை அனுமதி அட்டை மாணவர்களுக்கு வழங்கப்படமாட்டாது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.