யாழ் பல்கலையில் முதன் முறையாக கணினி விஞ்ஞானத்தில் பேராசிரியர்கள் நியமனம்!
5 view
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். கணினி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.ரமணன், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். சியாமளன் ஆகியோரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று 26 ஆம் திகதி, சனிக்கிழமை, காலை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் கலாநிதி ஏ. ரமணன், கலாநிதி எம் சியாமளன் ஆகியோரின் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்த, மூதவையினால் விதந்துரைக்கப்பட்ட துறைசார் நிபுணர்களின் மதிப்பீட்டு அறிக்கைகள், நேர்முகத் தேர்வு முடிவுகள் ஆகியன இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில், கணினி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.ரமணன், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். சியாமளன்…
The post யாழ் பல்கலையில் முதன் முறையாக கணினி விஞ்ஞானத்தில் பேராசிரியர்கள் நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் பல்கலையில் முதன் முறையாக கணினி விஞ்ஞானத்தில் பேராசிரியர்கள் நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
