ஜி20 முன்னேற்பாடு: 5இல் அனைத்து கட்சிக் கூட்டம்
58 view
இந்தியாவில் அடுத்த ஓராண்டுக்கு நடைபெறவுள்ள ஜி-20 கூட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்த விவரங்களை தெரியப்படுத்தும் வகையில், டெல்லியில் அடுத்தமாதம் அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. உலகத் தலைவா்கள் பங்கேற்கும் ஜி-20 உச்சி மாநாடு, டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பா் 9, 10 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.அதற்கு முன்பாக, நாடு முழுவதும் சுமாா் 200 கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த விவரங்களை தெரியப்படுத்தும் வகையில், எதிர்வரும் 5 ஆம் திகதி குடியரசுத் தலைவர் மாளிகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க சுமார் 40 அரசியல் கட்சிகளின் தலைவா்களுக்கு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜி20 முன்னேற்பாடு: 5இல் அனைத்து கட்சிக் கூட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜி20 முன்னேற்பாடு: 5இல் அனைத்து கட்சிக் கூட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
