வவுனியாவில் பாவனைக்கு உதவாத 16,000 கிலோகிராம் நெல் பறிமுதல்

13 view
வவுனியாவில் உள்ள தனியார் நெல் களஞ்சியசாலையில் இருந்து பொலன்னறுவைக்கு நெல் மூடையினை ஏற்றி சென்ற லொறி ஒன்று நேற்று 24ம் திகதியன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர். பாவனைக்கு உதவாத வகையில் இருந்த16,000 கிலோகிராம் எடையையுடைய நெல்  ஏற்றிச்சென்ற லொறியொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது. வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே ​​இவ்வாறு பாவனைக்கு உதவாத நெல் சரக்குகளை ஏற்றிச் சென்ற லொறியும், லொறியின் பொறுப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட நெல் இருப்பு லொறி மற்றும் நெல் இருப்புக்களை ஏற்றி சென்ற நபரும் இன்று (25) வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பில் வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post வவுனியாவில் பாவனைக்கு உதவாத 16,000 கிலோகிராம் நெல் பறிமுதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース