பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்து ,அதிபருக்கு வீடியோ அனுப்பி இளைஞன் – இலங்கையில் அதிர்ச்சி
40 view
மொறவக்க பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபரான 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக சிங்கள அச்சு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. பாலியல் துஷ்பிரயோகத்தின் வீடியோ காட்சிகள் பாதிக்கப்பட்ட மாணவியின் பாடசாலை அதிபர் உட்பட பலருக்கு வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது இல்லத்தில் வைத்து 11 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்ற பின்னர் சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், அவற்றை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அந்த வீடியோ காட்சிகளை அவர் தனது நண்பர்கள் மற்றும் பாடசாலை அதிபர் உட்பட பலருடன் வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால்…
The post பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்து ,அதிபருக்கு வீடியோ அனுப்பி இளைஞன் – இலங்கையில் அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்து ,அதிபருக்கு வீடியோ அனுப்பி இளைஞன் – இலங்கையில் அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
