வடை, ஐஸ் கிறீம் வாங்குவதற்கு பக்கத்து வீட்டை உடைத்து திருடிய சிறுவர்கள் கைது

11 view
அளவத்துகொடை பொலிஸ் பிரிவில் உள்ள சைஸ்ட்டன் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் நேற்று (24) கைதாகி உள்ளனர். இது பற்றித் தெரிய வருவதாவது, மேற்படி சம்பவத்தில் இரு சிறுவர்களும் அயல் வீடு ஒன்றில் வீட்டார் இல்லாத நேரத்தில் பின் பக்கம் கதவை உடைத்து உட்புகுந்துள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த மின் உபகரணங்கள் சிலவற்றை திருடி உள்ளனர். பின்னர் அதில் ஒரு மின் உபகரணத்தை 300 ரூபா பணத்திற்கு விற்பனை செய்துள்ளனர். அந்த உபகரணத்தின் உண்மைப் பெறுமதி 3,650 ரூபாவாகும். விற்பனை செய்து கிடைத்த 300 ரூபா பணத்திற்கு வடையும், ஐஸ்கிறீமும் வாங்கி சாப்பிட்டுள்ளனர். மற்றும் உபகரணங்களை பக்கத்தில் உள்ள ஒரு புதரில் எறிந்துள்ளனர். வீட்டார் செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து திருடப்பட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். திருடப்பட்ட மின் உபகரணம் ஒன்றை 300 ரூபாவிற்கு வாங்கிய நபரும்…
The post வடை, ஐஸ் கிறீம் வாங்குவதற்கு பக்கத்து வீட்டை உடைத்து திருடிய சிறுவர்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース