கரைச்சி பிரதேச சபை அமர்வில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி!

13 view
கரைச்சி பிரதேச சபை அமர்வில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் அமர்வு இன்று காலை தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் ஆரம்பமானது. இதன் போது, கனகபுரம் மற்றும் தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களை கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின் கீள் கொண்டுவந்து, மனிதவளம், இயந்திர வளங்களை அங்கு பயன்படுத்தல் மற்றும் மரக்கன்றுகளை வழங்கல் எனும் தீர்மானமும், பிரதேச சபை ஒதுக்கீட்டில் நலிந்த மாவீரர்களின் குடும்பங்களிற்கு உதவும் வகையில் ஒதுக்கீடுகளை ஒரு பெயரில் மேற்கொள்ளவும் தவிசாளரினால் பிரேரணை முன்வைக்கப்பட்டது. குறித்த பிரேரணையை ஆதரித்து பேசிய அனைத்து கட்சி பிரதிநிதிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக தவிசாளர் சபையில் அறிவித்தார். தொடர்ந்து, சபையில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
The post கரைச்சி பிரதேச சபை அமர்வில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース