ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் எரிபொருளை கொள்வனவு செய்வது குறித்து அலி சப்ரி பேச்சு!
6 view
ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பாக மொஸ்கோவுடன் இலங்கை பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே வெளிவிவகார அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ரஷ்யாவுடன் இலங்கை நீண்டகாலமாக நல்ல இராஜதந்திர உறவுகளைப் பேணி வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். சர்வதேச நியதிகள் அல்லது சட்டங்களை மீறாமல் இலங்கை ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய-உக்ரேனிய மோதலால் நாங்கள் அசாதாரணமாக பாதிக்கப்பட்டுள்ளோம் என தெரிவித்த அமைச்சர், எனவே இராஜதந்திர ரீதியிலும் பேச்சுவார்த்தை மூலமும் இதனை விரைவாக தீர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். பெட்ரோல், நிலக்கரி, தானிய விலைகள் மற்றும் உரங்களின் விலை உயர்வு ஆகியவற்றால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நிலவும் இராணுவ மோதல்கள் பல தசாப்தங்களில் மிக மோசமான பரிமாற்ற நெருக்கடியை…
The post ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் எரிபொருளை கொள்வனவு செய்வது குறித்து அலி சப்ரி பேச்சு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் எரிபொருளை கொள்வனவு செய்வது குறித்து அலி சப்ரி பேச்சு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
