மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவிப்பு!
13 view
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டு அம்பாறை தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ப.சாந்தன், காரைதீவுப் பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், வெல்லாவெளி பிரதேச சபை உறுப்பினர் தியாகராஜா, உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களை நினைவு கூரும் முகமாக மாவீரர்களின் பெற்றோர், ஜனநாயகப் போரளிகள் கட்சியின் உபதலைவர், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்டோரால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுரை, சிறப்புரைகள் இடம்பெற்று பின் மட்டக்களப்பு மாவட்ட மாவீரர்களின் பெற்றொர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு உதவிகள் மற்றும் தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. மாவீரர் நினைவு…
The post மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
