யாழில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் போதை மாத்திரைகளுடன் கைது!
36 view
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸாரினால் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின் போது , 19 மற்றும் 22 வயதுடைய ஒரு இளைஞர்கள் 8 மற்றும் 10 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது , தமக்கு, மல்லாகம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் என தெரிவித்துள்ளனர். அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மல்லாகம் பகுதிக்கு விரைந்த பொலிஸார் , போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 36 வயதுடைய பெண்ணொருவரை 40 போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
The post யாழில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் போதை மாத்திரைகளுடன் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் போதை மாத்திரைகளுடன் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
