பிணையெடுக்க எவரும் முன்வராததால் 18 ஆண்டுகளாக விளக்கமறியலில் இருந்தவருக்கு பிணை
11 view
பிணைப்பத்திரத்தில் கையொப்பமிட்ட எவரும் முன்வராத காரணத்தாலும் பிணை தொடர்பில் நீதிமன்றில் வாதிட சட்டத்தரணிக்கு பணம் கொடுக்க முடியாமையாலும் 18 ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொலைச் சந்தேக நபர் ஒருவருக்கு நேற்று (22) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபந்தி பிணை வழங்கியுள்ளார். இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் பணிப்பாளர் சகுந்தலா கருணாசிங்க, பந்துல கமராச்சி மற்றும் லக்மினி அமரசிங்க ஆகியோர் முன்னிலையில் சந்தேக நபருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 70 வயதுடைய சந்தேக நபர் ஜேம்ஸ் அன்டனி லோரன்ஸ் என்பவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
The post பிணையெடுக்க எவரும் முன்வராததால் 18 ஆண்டுகளாக விளக்கமறியலில் இருந்தவருக்கு பிணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிணையெடுக்க எவரும் முன்வராததால் 18 ஆண்டுகளாக விளக்கமறியலில் இருந்தவருக்கு பிணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
