இலங்கையில் யானை – மனித மோதல் – 5 வருடங்களில் 989 மனிதர்களும் 3,646 யானைகளும் உயிரிழப்பு!

11 view
இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2016-2020) யானை-மனித மோதல் காரணமாக 989 பேரும், 3,646 காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் நடத்திய வருடாந்த அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. காட்டு யானைகளை விரட்டுவதற்காக 845 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டதாகவும் வருடாந்தம் 427 மில்லியன் ரூபா சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இவர்களுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அது தொடர்பான முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. அத்துடன், இவர்களுக்குத் தேவையான உபகரணங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் போதியளவு வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post இலங்கையில் யானை – மனித மோதல் – 5 வருடங்களில் 989 மனிதர்களும் 3,646 யானைகளும் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース