அடுத்த வருடமும் இலங்கை வாழ் மக்களுக்கு சோதனை
16 view
எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் மின்சாரம், எரிபொருள், ரயில் மற்றும் பேருந்து கட்டணங்கள் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று நிதி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கமைய கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் அதற்கு முன்னர் வரி மீளாய்வு நடத்தி VAT இல் இருந்து விலக்கு பெறக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பில் தனித்தனியான தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், புதிய VAT சட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் VAT வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது VAT வரி அமல்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது. இது தவிர, தற்போது VATக்கு உட்பட்ட டீசல் மற்றும் பெட்ரோல் மீது 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி…
The post அடுத்த வருடமும் இலங்கை வாழ் மக்களுக்கு சோதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடுத்த வருடமும் இலங்கை வாழ் மக்களுக்கு சோதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
