நகைகளை திருடிய குற்றத்தில் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து போதைப்பொருள் மீட்பு!

41 view
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதியில் உள்ள வீடுகளை உடைத்து 16 இலட்சம் ரூபா தங்க நகைகளை திருடிய சந்தேகநபர் ஒருவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் திருடிய நகைகள் சிலவற்றினை நகை கடையில் அடகு வைத்ததாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அவரிடமிருந்து 130 மில்லிக்கிராம் ஹெரோயின், நகைகள், நகை அடகு வைத்த ஆவணம் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர் இளவாலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
The post நகைகளை திருடிய குற்றத்தில் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து போதைப்பொருள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース