யாழில் பிறந்து 50 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு
41 view
சாவகச்சேரியில் பிறந்து 50 நாட்களேயான பெண் சிசு உயிரிழந்துள்ளது. இன்று (20) காலை பெண் சிசு அசைவற்று காணப்பட்ட நிலையில், பெற்றோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சிசுவை எடுத்து வந்தனர். எனினும், சிசு ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சளி காரணமாக சிசு உயிரழந்ததாக கருதப்படுகிறது. சாவகச்சேரியை சேர்ந்த சிசுவொன்றே இவ்வாறு உயிரிழந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரி இன்மையால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
The post யாழில் பிறந்து 50 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பிறந்து 50 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
