கடலோர பாதுகாப்புப் படையின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு!
20 view
இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் புதிய பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பூஜித விதான அவர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களை இன்று (நவம்பர் 16) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் கடலோர பாதுகாப்பு தலைவரும் சுமுகமாக கலந்துரையாடினர். ரியர் அட்மிரல் விதானவின் எதிர்கால நடவடிக்கைகள் சிறப்பாக அமைய இராஜாங்க அமைச்சர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ரியர் அட்மிரல் விதான கடலோர பாதுகாப்புப் படையின் 7வது பணிப்பாளர் நாயகமாக தனது நியமனக் கடிதத்தை பாதுகாப்பு செயலாளரிடமிருந்து கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இன்றைய தினம் அமைச்சில் நடைபெற்ற இந்ந சந்திப்பினை நினைவுகூரும் வகையில் ரியர் அட்மிரல் விதான இராஜாங்க அமைச்சருக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்தார்.
The post கடலோர பாதுகாப்புப் படையின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடலோர பாதுகாப்புப் படையின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
