800 கோடியானது உலக சனத்தொகை
13 view
உலக சனத்தொகை 800 கோடியை அடைந்துள்ளது என ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி உலக சனத் தொகை 700 கோடியாக அதிகரித்தது. அதன்பின் 11 ஆண்டுகளில் உலக சனத்தொகை மேலும் 100 கோடியால் அதிகரித்துள்ளது. உலகில் ஆகக்கூடுதலான சனத்தொகை கொண்ட நாடாக சீனாவைக் கடந்து இந்தியா முன்னேறுகிறது என ஐ.நா மதிப்பிட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டு உலக சனத்தொகை 850 கோடியாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக சனத்தொகை 900 கோடியாகுவதற்கு 15 வருடங்கள் தேவைப்படும். 2037 ஆம் ஆண்டில் உலக சனத்தொகை 900 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது ஐ.நா. மேலும் தெரிவித்துள்ளது.
The post 800 கோடியானது உலக சனத்தொகை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 800 கோடியானது உலக சனத்தொகை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
