நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத வரவு செலவுத் திட்டம்-சுரேஷ் காட்டம்!
24 view
ஜனாதிபதியினால் கடந்த 14.11.2022 அன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த வருடத்திற்கான வரவு-செலவுத் திட்டம் மக்களின்மீது மேலும் சுமைகளை ஏற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் ஏற்கனவே பொருளாதார ரீதியில் பாதிப்படைந்த மக்களின் வாழ்க்கைச் செலவை மேலும் அதிகரிப்பதையே இலக்காகக் கொண்டுள்ளது என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பொருளாதாரத்தைக் கொள்ளையடித்தவர்களிடமிருந்து அதனை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளையும் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் காணமுடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: 2023ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டமானது, எந்தவிதமான ஆரவாரமுமின்றி, பாராளுமன்றத்தின் ஆதரவுக் குரல்களுமின்றி ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அவர்களால் பாராளுமன்றத்தில் கடந்த 14.11.2022 அன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மொத்த வருமானமாக 3415பில்லியன் ரூபா என்றும் மொத்த செலவாக 5819 பில்லியன் ரூபா என்றும் எதிபார்க்கப்படுகிறது. அதன்படி துண்டுவிழும் தொகையாக 2404பில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின்…
The post நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத வரவு செலவுத் திட்டம்-சுரேஷ் காட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத வரவு செலவுத் திட்டம்-சுரேஷ் காட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
