இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவையும் விரைவில் ஆரம்பம்!
20 view
இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவையும் விரைவில் ஆரம்பிப்பதற்குரிய பேச்சு வார்த்தைகள் இந்திய அரசுடன் இடம் பெற்று வருகின்றதாக துறைமுகங்கள் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) விஜயம் மேற்கொண்டு, காங்கேசன்துறை துறை முகத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்தரிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை இந்தியாவுக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று வருகின்றன. அந்த பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதன் பிரகாரம் விரைவில் கப்பல் சேவினை ஆரம்பிக்க கூடிய சாத்திய கூறுகள் காணப்படுகின்றன. துறை முகத்துக்கு அருகில் சீமெந்து தொழிற்சாலை ஒன்று இயங்காத நிலையில் காணப்படுகின்றது. அதனை இயக்குவதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் அதன்படி கைத்தொழில் அமைச்சு மற்றும் ஜனாதிபதியுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி வெகு விரைவில் அதனை இயங்குவதற்குரிய நடவடிக்கையை எடுக்க உள்ளோம். மேலும் வடக்குக்கான எரிபொருட்கள் தரை…
The post இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவையும் விரைவில் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவையும் விரைவில் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
