யாழ்.கச்சோி – நல்லுார் வீதியில் சுமார் 200 வருடங்கள் பழமையான மரம் அடியோடு சாய்ந்தது..!
12 view
யாழ்ப்பாணம் – கச்சோி வீதியில் 200 வருடங்கள் பழமையான வேப்ப மரம் சீரற்ற காலநிலை காரணமாக கீழே விழுந்துள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் இடிந்து விழுந்ததில் அருகில் உள்ள வீட்டின் சுவர் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதன் காரணமாக யாழ்.மாநகர சபையினால் கச்சேரி நல்லூர் பிரதான வீதி போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது விழுந்த மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் கூறுகையில், இந்த மரம் 200 ஆண்டுகள் பழமையானது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பாதுகாக்காததால், மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் அது பகலில் அல்லது பிஸியான நேரத்தில் நடந்தால் உயிரிழப்புக்கு அரசு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். மேலும், எனது வீட்டின் சுவர் மீது இந்த மரம் விழுந்துள்ளதால், சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த வீட்டின் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். என்றும் கூறினார்.
The post யாழ்.கச்சோி – நல்லுார் வீதியில் சுமார் 200 வருடங்கள் பழமையான மரம் அடியோடு சாய்ந்தது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.கச்சோி – நல்லுார் வீதியில் சுமார் 200 வருடங்கள் பழமையான மரம் அடியோடு சாய்ந்தது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
