எண்ட வேலை எனக்குத் தெரியும் ,காணிகளை படையினருக்கு கொடுப்பேன் – வடக்கு ஆளுநர் மிரட்டல் (படங்கள் இணைப்பு)

11 view
முப்படைகளுக்குத்   தேவையான காணிகளை,வடக்கில் இருந்து  தாரை வார்ப்பது தொடர்பான கலந்துரையாடல் , யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுனர் அலுவலகத்தில் இன்று மதியம் நடைபெறவுள்ளது.இந்த நிலையில் மக்களின் காணிகளை இனியும் படையினர் அபகரிக்க கூடாது என்று தெரிவித்து,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக மக்கள் இன்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் போது போராட்ட இடத்துக்கு வருகை ஆளுநர் தெரிவிக்கையில்: இங்கே யாரும் கத்தக் கூடாது.என்னுடைய வேலை எனக்கு பார்க்கத் தெரியும்.உங்கள் பிரச்சினையை மட்டும் கூறுங்கள்.காணி வழங்குவதற்கு சட்ட ஏற்பாடுகள் உள்ளது.என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு நீங்கள் சொல்லத் தேவையில்லை என்று காரசாரமாக கூறினார். இதற்குத் மக்கள் பதில் தெரிவிக்கையில்: எங்களின் காணிகள் எமக்கு வேண்டும்.இனியும் காணிகள் அபகரிக்கக்கூடாது என்று கோஷமிட்டனர். அதன் பின்னர் ஆளுநர் அங்கிருந்து சென்று விட்டார்.
The post எண்ட வேலை எனக்குத் தெரியும் ,காணிகளை படையினருக்கு கொடுப்பேன் – வடக்கு ஆளுநர் மிரட்டல் (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース