மறைந்த அமரகீர்த்தி அத்துகோரலவின் குடும்பத்தாருக்கு நன்கொடை வழங்கிவைப்பு!
7 view
பாராளுமன்ற உறுப்பினர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட தொன்னூரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின்போது கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மனைவியிடம் நேற்று (14) கையளித்தார். பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தின் பின்னர் இந்த பணத்தை ஜனாதிபதி கையளித்தார். பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச அதற்கான காசோலையை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், ஜனாதிபதி அதனை மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மனைவி மற்றும் மகன்களிடம் வழங்கினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் 183 பேர் அதற்காக நிதியுதவி அளித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதிவெல வீடமைப்புத் தொகுதியில் உள்ள ஆளுங்கட்சியைச் சேர்ந்த 20 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட “மாதிவெல மிதுரோ” கழகம் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்காக இந்நிதியை சேகரிக்க…
The post மறைந்த அமரகீர்த்தி அத்துகோரலவின் குடும்பத்தாருக்கு நன்கொடை வழங்கிவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மறைந்த அமரகீர்த்தி அத்துகோரலவின் குடும்பத்தாருக்கு நன்கொடை வழங்கிவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
