பொலிஸாரின் தன்னிச்சையான செயற்பாடு – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை
24 view
பொலிஸாரின் தன்னிச்சையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க, பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டனர். மனித உரிமைகளை மீறும் வகையில் பொலிஸார் ஈடுபட்டுள்ள சட்டவிரோத செயற்பாடுகளை அவதானித்துள்ளதாக அந்த ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தச் சூழல் ஜனநாயக சமூகத்தின் உயிருக்கும் நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவியல் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்கக் கட்டுப்பட்ட ஒரு பாதுகாப்பு அமைப்பிலிருந்து இதுபோன்ற நடவடிக்கைகளை மன்னிக்க முடியாது என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இக்கலந்துரையாடலின் போது, எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு கட்சிகள் மேற்கொள்ள…
The post பொலிஸாரின் தன்னிச்சையான செயற்பாடு – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸாரின் தன்னிச்சையான செயற்பாடு – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
