யாழில். போலி உறுதி விவகாரத்தில் சட்டத்தரணிக்கு பிணை – ஏனையோர் தொடர்ந்தும் மறியலில்!
6 view
யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் விளக்கமறியரில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியை நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் கட்டளையிட்டார். யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணி ஒன்று அதன் இறந்து விட்ட உரிமையாளர்களான தம்பதியின் போலிக் கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியினால் மோசடியாக உரிமை மாற்றம் செய்யப்பட்டது. அது தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட, சட்டத்தரணி உள்ளிட்ட 9 சந்தேக நபர்களும் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் சார்பான பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்து வரும் 21ஆம் திகதி கட்டளை வழங்கப்படும் என்று தவணையிட்ட மன்று அன்றுவரை சந்தேக நபர்கள் 9 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் சட்டத்தரணி சார்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை நகர்த்தல் பத்திரத்தை முன்வைத்து…
The post யாழில். போலி உறுதி விவகாரத்தில் சட்டத்தரணிக்கு பிணை – ஏனையோர் தொடர்ந்தும் மறியலில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில். போலி உறுதி விவகாரத்தில் சட்டத்தரணிக்கு பிணை – ஏனையோர் தொடர்ந்தும் மறியலில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
