யாழில். வீடுடைத்து திருடிய குற்றத்தில் வவுனியா வாசி கைது!
6 view
யாழ்ப்பாணம் கோண்டாவிலில் வீடொன்றை உடைத்து நகை, பணம் மற்றும் அலைபேசியைத் திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கோப்பாய் பொலிஸாரினால் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினை கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்று இருந்தனர். அது தொடர்பில் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உரும்பிராய் பகுதியில் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த நபர் வவுனியாவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதாகவும் , அவரிடம் இருந்து இரண்டரை பவுண் தங்க சங்கிலி, 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு இலட்ச ரூபாய்…
The post யாழில். வீடுடைத்து திருடிய குற்றத்தில் வவுனியா வாசி கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில். வீடுடைத்து திருடிய குற்றத்தில் வவுனியா வாசி கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
