பருத்தித்துறையில் 13 இளைஞர்கள் கைது!
5 view
சட்டவிரோதமாக கூட்டம் கூடியமை , சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 13 இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை , பாவனைகள் மற்றும் போதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் போன்ற அநாகரிக செயற்பாடுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் , பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளை முன்னெடுத்த போது , வீதிகளில் அநாவசியமாக கூட்டம் கூடி நின்றமை , சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியமை உள்ளிட்ட குற்றங்களில் 13 இளைஞர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 13 இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , அவர்களை கடுமையாக எச்சரித்து பொலிஸார் விடுவித்தனர்.
The post பருத்தித்துறையில் 13 இளைஞர்கள் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பருத்தித்துறையில் 13 இளைஞர்கள் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
