அதிவேக நெடுஞ்சாலை பயணிகள் பேரூந்து உரிமையாளர்கள் விரைவில் பணிப்புறக்கணிப்பில்
5 view
அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் சேவையில் ஈடுபடும் பயணிகள் பேரூந்து சேவையை இடைநிறுத்தி, பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த போக்குவரத்து தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நியாயமற்ற முறையில் விலைமனுக்கோரலுக்கான கட்டணத்தை அறவிடுவதாக தெரிவித்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்ததாக ஒன்றிணைந்த போக்குவரத்து தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
The post அதிவேக நெடுஞ்சாலை பயணிகள் பேரூந்து உரிமையாளர்கள் விரைவில் பணிப்புறக்கணிப்பில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிவேக நெடுஞ்சாலை பயணிகள் பேரூந்து உரிமையாளர்கள் விரைவில் பணிப்புறக்கணிப்பில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
