நிதி மோசடிக்காரி திலினி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு!
16 view
பல கோடி ரூபா நிதி மோசடியைச் செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, கைப்பேசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவரிடம் 4 கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று மேலும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. திலினி பிரியமாலியின் நிதி மோசடியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி சிறிவர்தன ஊடாக குறித்த வர்த்தகர் திலினி பிரியமாலியை கடந்த மே மாதம் அறிந்துகொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. தமக்கு 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஐ-போன் 13 ப்ரோ மெக்ஸ் ரக கைப்பேசி ஒன்று தேவைப்படுகின்றது என ஜானகி சிறிவர்தன மேற்கொண்ட தொலைபேசி அழைப்புக்கு அமைய, குறித்த வர்த்தகர் கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள அவரது அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். குறித்த கைபேசியை ஜானகி சிறிவர்தனவிடம் கையளிக்கும் சந்தர்ப்பத்தில், திலினி பிரியமாலி மற்றுமொரு நபருடன் டொலர் கொடுக்கல் வாங்கலில்…
The post நிதி மோசடிக்காரி திலினி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிதி மோசடிக்காரி திலினி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
