திலினி பிரியமாலி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு!
15 view
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, கைப்பேசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவரிடம் 40 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மேலும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. நிதி மோசடியுடன் தொடர்புடையதாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி சிறிவர்தன ஊடாக குறித்த வர்த்தகர் திலினி பிரியமாலியை கடந்த மே மாதம் அறிந்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தமக்கு 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஐ-போன் 13 ப்ரோ மெக்ஸ் ரக கைப்பேசி ஒன்று தேவைப்படுவதாக ஜானகி சிறிவர்தன மேற்கொண்ட தொலைபேசி அழைப்புக்கு அமைய, குறித்த வர்த்தகர் கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சென்றுள்ளார். குறித்த கைப்பேசியை ஜானகி சிறிவர்தனவிடம் கையளிக்கும் சந்தர்ப்பத்தில், திலினி பிரியமாலி மற்றுமொரு நபருடன் டொலர் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருந்தமையை குறித்த வர்த்தகர் அவதானித்துள்ளார். இதன்போது, வர்த்தகத்திற்கு டொலர் தேவையேற்படின் திலினி பிரியமாலியை அணுக முடியும் என ஜானகி சிறிவர்தன குறித்த வர்த்தகருக்கு அறிமுகம்…
The post திலினி பிரியமாலி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திலினி பிரியமாலி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
