கோப்பையை பறிகொடுத்த பாகிஸ்தானை ‘கர்மா’ என சீண்டிய இந்திய வீரர்! என்ன நடந்தது?
37 view
டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், இணையத்தில் கர்மா என்கிற வார்த்தை ட்ரெண்டாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. ‘கர்மா’ ட்ரெண்டாவது ஏன்? உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததும், அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தமது ட்விட்டர் பக்கத்தில் உடைந்த இதயம் போன்ற எமோஜியை பதிவிட்டிருந்தார். அதனை ரீ-ட்வீட் செய்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ‘மன்னிக்க வேண்டும் சகோதரா, இதற்குப் பெயர்தான் கர்மா’ என குறிப்பிட்டுள்ளார். முகமது ஷமியின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்துடனான அரையிறுதி ஆட்டத்தை சுட்டிக்காட்டி, ‘ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாத உங்களின் ஆட்டத்திற்கு பாகிஸ்தான் இன்று ஆடிய விதம் எவ்வளவோ பரவாயில்லை’ என ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். ஷமி குறித்து அக்தர் பேசியது என்ன?…
The post கோப்பையை பறிகொடுத்த பாகிஸ்தானை ‘கர்மா’ என சீண்டிய இந்திய வீரர்! என்ன நடந்தது? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோப்பையை பறிகொடுத்த பாகிஸ்தானை ‘கர்மா’ என சீண்டிய இந்திய வீரர்! என்ன நடந்தது? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
