ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் மக்களை விட்டு விலகி நிற்காது- சஜித்!
17 view
ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் மக்களை விட்டு விலகி நிற்காது என்று தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்தால் மக்களின் எதிர்பார்ப்புக்கள், அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாததன் காரணமாகவே மக்களுக்குப் பயந்து போயுள்ளனர் எனத் தெரிவித்தார். மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் கலிகமுவ தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று (25) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். அதாவது, தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கு தேவைப்பட்டிருப்பது மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதனை விட அமைச்சுக்கள், வரப்பிரசாதங்கள், சலுகைகளை அதிகரித்துக் கொள்வதாகும் என்பதனால், அவர்களால் மக்களுக்கு நிவாரணம் வழங்கி மக்களுக்கான பணிகளைச் செய்ய முடியவில்லை என்றார். அத்துடன், உணவுப் பணவீக்கம், வாழ்க்கைச் செலவு, மின்சாரக் கட்டணம் கூட பாரியளவில் உயர்ந்துள்ளதாகவும் இந்த அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு அதிகப் பங்காற்றிய மதஸ்தானங்களைக் கூட பழிவாங்க ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மூலைசாளிகளின் வெளியேற்றம், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதற்கு கடந்த…
The post ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் மக்களை விட்டு விலகி நிற்காது- சஜித்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் மக்களை விட்டு விலகி நிற்காது- சஜித்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
