மன்னாரில் இடம்பெற்ற தொழிற்சந்தை!

36 view
மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை காலை தொழிற் சந்தை நடாத்தப்பட்டது. மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பமான இந்த நிகழ்வில், பல தொழில் வழங்கும் நிறுவனங்களும் பங்குபற்றியிருந்தன. இந்தநிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டார்.மேலும், பிரதேசச் செயலாளர், திணைக்கள தலைவர்கள், தொழில் வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் வேலை வாய்ப்புக்காக காத்திருந்த பல நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது வருகை தந்த தொழில் வழங்கும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தமது நிறுவனங்கள் ஊடாக எவ்வாறு தொழிலை பெற்றுக்கொள்ள முடியும் மற்றும் அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.
The post மன்னாரில் இடம்பெற்ற தொழிற்சந்தை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース