சுமார் 300 அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளனர்!
21 view
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, சுமார் 300 அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளனர். பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. சில அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு உட்பட்டவர்களே வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் அரச ஊழியர்களுக்கு 05 வருடங்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
The post சுமார் 300 அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளனர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுமார் 300 அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளனர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
