போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட கலந்துரையாடல்!

32 view
யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பிலும் அதனை கையாள்வது தொடர்பிலும் கலந்துரையாடலொன்று நேற்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போதைய நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வைத்தியசாலையில் பல உயிரிழப்புக்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனை பொலிஸார், பெற்றோர் மற்றும் சமூகத்தில் உள்ளவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என போதன வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். மேலும், பாடசாலை மாணவர்களிடையே குறித்த போதைப்பொருள் பாவனை அதிகம் காணப்படுவதால் பாடசாலை அதிபர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மாணவர் தொடர்பாக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். எதிர்வரும் காலங்களில் பாடசாலைகள் ஊடாக பல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை…
The post போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース