ஹெரோயினுக்கு அடிமையான ஆண்கள் மூவரால் 15 வயதுச் சிறுவன் துஷ்பிரயோகம்
17 view
ஹெரோயினுக்கு அடிமையான ஆண்கள் மூவரால் 15 வயதுச் சிறுவன் துஷ்பிரயோகம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உயிர்க் கொல்லி போதைப் பொருளான ஹெரோயினுக்கு அடிமையான 25 க்கும் 27 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் மூவரால், அந்தப் பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன்பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளான். அந்தப் பகுதியிலுள்ள முன்பள்ளி ஒன்றில் வைத்தே இந்தச் சம்பவம் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. மாலைவேளையில் சிறுவனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று மூவரும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, முறைப்பாட்டை மீளப்பெறுமாறு சிறுவனின் தாயாருக்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அழுத்தம்=மிரட்டல்= விடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post ஹெரோயினுக்கு அடிமையான ஆண்கள் மூவரால் 15 வயதுச் சிறுவன் துஷ்பிரயோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹெரோயினுக்கு அடிமையான ஆண்கள் மூவரால் 15 வயதுச் சிறுவன் துஷ்பிரயோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
