இடைக்கால அதிகாரத்தை நிறுவி அரசியல் தீர்வை அடைய வேண்டும் – பிரித்தானிய தமிழர் பேரவை
8 view
சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. திறமையான அதிகார வரம்பைக் கொண்ட ஐ.நா. உறுப்பு நாடுகளை, தங்கள் நீதிமன்றங்களில் பயனுள்ள மற்றும் சுதந்திரமான குற்றவியல் மற்றும் பிற நடவடிக்கைகளை எடுக்க தாம் கோரவுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வி.ரவி குமார் தெரிவித்தார். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஏற்கனவே நிறுவப்பட்ட சாட்சியங்கள் சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் பரிந்துரை பொறிமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் பலப்படுத்த வேண்டும் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும் வடக்கு மற்றும் கிழக்கு 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரினால் துண்டாடப்பட்டு, போருக்கு முன்னும் பின்னும் அனைத்து இலங்கை அரசாங்கங்களாலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தவுள்ளது. அத்தோடு இடைக்கால அதிகாரத்தை…
The post இடைக்கால அதிகாரத்தை நிறுவி அரசியல் தீர்வை அடைய வேண்டும் – பிரித்தானிய தமிழர் பேரவை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இடைக்கால அதிகாரத்தை நிறுவி அரசியல் தீர்வை அடைய வேண்டும் – பிரித்தானிய தமிழர் பேரவை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
